கண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் பாரிய மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில், பயணித்துக்கொண்டிருந்த இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இன்று (21) இடம்பெற்ற இச்சம்பவத்தில் வாகனங்களில் பயணித்த இருவர் பகுதியளவில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இரு வாகனங்களில் ஒன்று மருத்துவருக்குச் சொந்தமானது எனக் குறிப்பிடப்படுவதுடன், மரம் விழுந்ததை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
