திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் 'ஹரக் கடா' மற்றும் மந்தினு பத்மசிறி எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சிறைச்சாலைத் திணைக்களம் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த மோதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக உதவிச் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'ஹரக் கடா' மற்றும் 'கெஹெல்பத்தர பத்மே' ஆகியோருக்கு இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த 'கெஹெல்பத்தர பத்மே' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்போது வெலிசர சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
.png)