வெள்ளை அழகியை ஏமாற்றி தவறான தொழில்-இலங்கை தம்பதியினருக்கு நீதிமன்றில் நடந்த சம்பவம்

 

கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த யுவதி ஒருவரை ஏமாற்றி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 7 ஆண்டு கால சிறைத்தண்டனையை, பிள்ளைகளின் நலனைக் கருத்திற்கொண்டு 4 ஆண்டுகளாகக் குறைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்சே வழங்கியுள்ளது.

மோசடியான முறையில் ரஷ்ய யுவதியொருவரை இலங்கை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியமை தொடர்பில் கணவன், மனைவிக்கு எதிராகக் குற்றச்சட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ரஷ்ய யுவதியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியமை மற்றும் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் procuration (விபச்சாரத்திற்கு ஆளக்கியமை) குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.குறித்த குற்றங்களுக்கு உதவி மற்றும் ஒத்தாசை புரிந்தமைக்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் மேல் நீதிமன்றம் இருவருக்கும் தலா மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் தலா 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், தலா 25,000 ரூபா அபராதமும், 500,000 ரூபா நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டிருந்ததுடன், தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுப்புமாறும் உத்தரவிட்டிருந்தது.

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இவர்களின் சிறைவாசம் காரணமாகப் பிள்ளைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டினர்


Post a Comment