அம்பிட்டிய பிக்குவுக்கு பிணை

மட்டக்களப்பில் அமைந்துள்ள மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கடந்த 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடந்த 7ஆம் திகதி மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று வரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த அம்பிட்டிய தேரர் கடுமையான நிபந்தனைகளுடன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment