காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 11 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆண் மற்றும் பெண் கைதிகள் தங்கியிருக்கும் அறைக்கட்டிடங்ளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் சிறைச்சாலை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை சிறைச்சாலை தலைமையக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
