11 வருடங்களின் பின்னர் மரண தண்டனை

 

பிட்டிகல, மிரிஸ்வத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் கண்டிப் பகுதியை வதிவிடமாகக் கொண்ட ராஜ் சந்திரமோகன் என்பவராவார்.

பிட்டிவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி நபர் ஒருவரை தடியால் தாக்கி, பலத்த காயங்களை ஏற்படுத்தி இந்தக் கொலை இழைக்கப்பட்டுள்ளது.

வடக்கு பிட்டிகலவைச் சேர்ந்த சோமசுந்தரம் கிருஷ்ணகுமார் என்பவரால் பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறையீட்டிற்கு அமைவாகவே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.


பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் ஊசுஐ 2264ஃ2019 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் நீண்டகாலமாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதுடன், தண்டனைச் சட்டக்கோவையின் 32 ஆம் பிரிவுடன் இணைத்துப் வாசிக்கப்படும் 296 ஆம் பிரிவின் கீழ் விதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment