முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வாக்கு மூலம் ஒன்றை வழங்கிய நிலையில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.
மிக் போர் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அதிபர் இப்பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, அவர் இன்று (11) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குச் சென்றார்.
அங்கு சில மணிநேரங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து புறப்பட்டுள்ளார்.
