பத்தேதேகம முக்கொலை சந்தேக நபர் கைது

பத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பாதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிலர் மீது, காரில் வந்த கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியது.

  இக்குற்றத்திற்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் 2026.09.29 அன்று இரவு 06 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஹல்பாதொட பகுதியில் வலான பிரிவினரால் கைது செய்
யப்பட்டு பத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் என்பதோடு, அத்துடன் சந்தேகநபர் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

மேலும் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment