கடிதம் எழுதிவைத்து மனைவியை சம்பவம் செய்த கணவன்

கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இம்புலஹேன பகுதியில் உள்ள வீட்டிற்குள் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 உயிரிழந்தவர் கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஆவார்.

  சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது உயிரிழந்த பெண்ணின் கணவரால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 எனவே, இக்கொலையை கணவரே செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

  சந்தேகநபர் வெயங்கொட பொலிஸ் பிரிவில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 இருவரின் சடலங்களும் வதுபிடிவல மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

 கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment