மதுபோபோதையில் தகராறு! போத்தலை உடைத்து நெஞ்சில் குத்தி 38 வயது நபர் உயிரிழப்பு

 கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுங்கல பகுதியில் போத்தலால் தாக்கப்பட்டதில் காயமடைந்து பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என கடுகன்னாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 உயிரிழந்தவர் கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஆவார்.

உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரியின் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், மது போத்தலை  உடைத்து நெஞ்சில் குத்தியதால் இக்கொலை நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  காயமடைந்த சந்தேகநபர் கண்டி மரு
த்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரேத பரிசோதனைக்காக சடலம் பேராதனை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment