கம்பஹாவில் நீரில் மூழ்கி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

கம்பஹா, கட்டவெல அமுன பகுதியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முதுன்கொட, கம்பஹா பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் குருநாகல் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment