அனுராதபுரத்தில் கோர விபத்து! கார்–மோட்டார் சைக்கிள் மோதி 33 வயது நபர் உயிரிழப்பு

அனுராதபுரம் – ரம்பேவ வீதியின் சாலியபுர பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 33 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரம்பேவையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற கார் ஒன்றும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் பலத்த காயமடைந்த நிலையில், அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பரசங்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment