திருகோணமலை – புத்தளம் வீதியின் நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 29 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை நோக்கிச் சென்ற கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த கார் சாரதி, மகதிவுல்வெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
