இலஞ்ச ஊழல் ஆணைக்கழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை குறிப்பிட்ட திகதிக்கு சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பில் நிர்வாக அபராதங்களை அறவிடுவதற்குக் முன்னர், அதற்கான நியாயமான காரணங்கள் இருப்பின் அவற்றை வெளிப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகப் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2026.06.30 ஆம் திகதிக்குப் பின்னர், அதாவது குறித்த திகதி கடந்து 2026.08.31 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கப்பட்ட சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பிரகடனங்கள் தொடர்பில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் 90 ஆம் பிரிவின் பிரகாரம் தாமதமான நாட்களின் எண்ணிக்கைக்கு அமைய நிர்வாக அபராதமொன்று சட்டரீதியாக அறவிடப்பட வேண்டும் எனவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவ்வாறு நிர்வாக அபராதங்களை அறவிடுவதற்குக் முன்னர் அந்தத் தாமதம் தொடர்பில் ஏதேனும் நியாயமான காரணங்கள் இருப்பின், அது பற்றிய விபரங்களை ஆணைக்குழுவிற்கு அறிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இற்கமைய குறித்த காரணங்களை 2026 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்துமூலம் (உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள் இருப்பின் அவற்றுடன் சேர்த்து) அனுப்பிவைக்க வேண்டும் என அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு சமர்ப்பிக்கும்போது பிரகடனத்தைச் சமர்ப்பித்த நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் குறிப்பிடுவது கட்டாயமானதாகும். 
அத்துடன், 2026 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஆணைக்குழுவிற்கு எவ்வித காரணக் விளக்கமும் கிடைக்கப்பெறாவிட்டால், தாமதம் தொடர்பில் தெரிவிப்பதற்கு எவ்வித காரணமும் இல்லையெனக் கருதி நிர்வாக அபராதங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரணக் விளக்கங்களைச் சமர்ப்பிக்கும்போது தபால மூலம் அனுப்புவதாயின் கடித உறையின் இடது பக்க மேல் மூலையிலும், மின்னஞ்சல் ஊடாக அனுப்புவதாயின் அதன் 'Subject' பகுதியிலும் (தாமதத்திற்கான காரணங்களை வெளிப்படுத்தல்) எனக் குறிப்பிட வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட முகவரிகள் மற்றும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

நிறுவன முகவரி: 
பணிப்பாளர் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனப் பிரிவு), இல. 36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07.
• மின்னஞ்சல் முகவரி: ald@ciaboc.gov.lk
• தொலைபேசி ஃ தொலைநகல் இலக்கம்: 0112587287
• வாட்ஸ்அப் இலக்கம்: 0767011954

Post a Comment