மீண்டும் சிறை செல்ல போகும் மற்றுமொரு காவி உடை தரித்த பிரபல சண்டியர்

மைத்திரியின் பொது மன்னிப்பு செல்லாது - நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு
மீண்டும் கூண்டுக்கு செல்வாரா ஞானசார தேரர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, 2018 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தண்டனையிலிருந்து ஞானசார தேரரை விடுவித்து, அப்போதைய ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment