அனைத்து பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு


 பயணிகள் போக்குவரத்துப் பேருந்துகள், ஊழியர் போக்குவரத்துப் பேருந்துகள் மற்றும் வேன்கள், பாடசாலை வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் 5,000 கிலோமீட்டர் ஓடுவதற்கு முன்பாக அல்லது ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது (இவற்றுள் எது முந்துகிறதோ அதன்படி) சாதாரண வாகனத் தகுதிச் சான்றிதழைப் (Roadworthiness Test)  பெற்றிருக்க வேண்டும். (இது சொந்தப் பயன்பாட்டுத் தனிப்பட்ட வாகனங்களுக்குப் பொருந்தாது) என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஆண்டுதோறும் பெறப்படும் வழக்கமான தகுதிச் பரிசோதனையை விட இது குறைவான செலவுடையது. இப்பரிசோதனையை ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை என்ற கட்டணத்தில்; பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்த கால விபத்துக்களை ஆராய்ந்த போது, பிரேக் (தடுப்பான்)ச ரியாகச் செயல்படாததே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. 

சில வாகனங்களில் ஒரு பக்க பிரேக் முழுமையாக மூடப்பட்டிருந்ததும், சிலவற்றில் பூச்செடிகளுக்கு நீர் ஊற்றும் குழாய்களைக் கொண்டு பிரேக் குழாய்கள் தயாரிக்கப்பட்டிருந்ததும் பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய தொழிற்தகைமை மட்டத்தின் 4ஆம் படியை (NVQ 4) பூர்த்தி செய்த எவரும், அங்கீகரிக்கப்பட்ட கேரேஜ்களில் (வாகனங்கள் திருத்தும் இடங்களில்) பதிவு செய்து இச்சோதனைகளை நடத்தும் வாய்ப்பைப் பெறுவதன் மூலம் மோட்டார் வாகனத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Post a Comment