கைது செய்யப்படுவாரா நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அடுத்த இலக்கு இவர்தானா?

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சவை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாமல் ராஜபக்ஷவை நாளைய தினம் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் முற்பகல் 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு நமல் ராஜபக்சவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அழைப்புக்கு இணங்க நமல் ராஜபக்ச ஆணைக்குழுவின் முன்பு முன்னிலையாவார் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தமிழ் பிளஸ் செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அவர் ஆணைக்குழுவின் முன்பு முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment