கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட 9 வயது சிறுவன் இலங்கையில் சிறுவர்களை கடத்தும் குழு சற்று முன்னர் வெளியான இரகசியம்

அகுரெஸ்ஸ, தெலிஜ்ஜவில பகுதியில் சுமார் 9 வயதுடைய சிறுவன் ஒருவனைக் கடத்த முயற்சித்ததாகச் சந்தேகிக்கப்படும் நால்வரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, சந்தேகநபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அவனது கைகளைத் துணியால் கட்டி கடத்த முயற்சித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாலிம்படை மற்றும் ஹுலந்தாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரையும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment