கட்டுநாயக்கவில் கைதாகியுள்ள பிரபலம் காரணம் என்ன தெரியுமா? நீதிமன்றையே ஏமாற்ற துணிந்த நபர்!

 கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான மொஹமட் முசாமில் என்பவரின் மகனான மொஹொமட் நிஷாம் ஜமால்டீன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று மாலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

47 வயதுடைய இவர், சிறி லங்கன் விமான சேவைக்கு சொந்தமான ருடு-503 விமானத்தில் லண்டன் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவின் அடிப்படையிலேயே இந்தைக் கைது இடம்பெற்றுள்ளது.

பின்னர், அன்றைய தினம் பிற்பகல் 03.20 மணிக்கு அவர் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மாலை 04.30 மணியளவில் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Post a Comment