2008 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்திருந்த தடுப்புக் காவலில் இருந்து இரண்டு பெண்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை பெண் அதிகாரிகள் இருவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் அக்டோபர் 5 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.