லாங்கொடை பின்னவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராவனாகந்த பகுதியில் தேயிலை செடியுடன் கஞ்சா வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னவல பொலிஸாரக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்து நபரின் தேயிலை தோட்டம் முற்றுகையிடுப் பட்டு பரிசோதனை செய்த போது குறித்த தோட்டத்தில் தேயிலை செடிக்குள் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருப்பதை அடுத்து குறித்த தோட்டத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்..
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பின்னவல பொலிஸ்ார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த முற்றுகையில் பின்னவல பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
