வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தி, வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஊடக சந்திப்பில் இணையத்தின் பிரதிநிதிகளான அன்னலிங்கம், அன்னராசா, நாகராசா மற்றும் வர்ணகுலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, குறிப்பாக கடல் அட்டைத் தொழில் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மேற்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கைகளால் உள்ளூர் மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுடன், கடல் வளங்களை பாதுகாக்கும் வகையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி மற்றும் நிரந்தரமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் எனவும் கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
