நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை

நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை என ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக ஊழல் தடுப்புச் சட்டங்களைப் பயன்படுத்துகின்றது என சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ஸ தொடர்பான சட்ட நடவடிக்கைகளின் போது சமர்ப்பிக்கப்படும் சாட்சிகள் குறித்து எவ்வித நம்பிக்கையும் கொள்ள முடியாது.

குறித்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அபேகோன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment