நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கடந்த முதலாம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு பாண் தொடர்பில் நாடு முழுவதும் 118 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடை காணப்படுகிறதா, எடை மற்றும் விலை முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா, மற்றும் குறைந்த எடை கொண்ட பாண் கண்டறியப்படும் போது அதனைத் தயாரித்த அல்லது விநியோகித்த பேக்கரி வரை விநியோகச் சங்கிலியை விசாரிக்க முடியுமா என்பது குறித்து இதன் போது விசேடமாக பரிசோதிக்கப்பட்டதாக குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்புகளின் போது கடைகள் மற்றும் பேக்கரிகள் அடங்கலாக 54 இடங்களில் குறைந்த எடையுடைய பாண் கண்டறியப்பட்டுள்ளதுடன், மேலும் 76 இடங்களில் பாணின் எடை முறையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.