இலங்கையில் 2026 ஓகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கம் 8.1% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (NCPI) தரவுகளுக்கமைய, கடந்த ஜூலை மாதத்தில் 7.2% ஆகக் காணப்பட்ட பணவீக்க விகிதம், ஓகஸ்ட் மாதத்தில் 8.1% ஆக உயர்த்தடைந்துள்ளது.
இதன்கீழ், உணவுப் பிரிவின் புள்ளியிடை பணவீக்கம் (Food Inflation) ஜூலை மாதத்தில் நிலவிய 4.9% இலிருந்து ஓகஸ்ட் மாதத்தில் 6.6% ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, உணவு அல்லாத பிரிவின் புள்ளியிடை பணவீக்கம் (Non-Food Inflation) ஜூலை மாதத்தில் பதிவான 9.2% இலிருந்து ஓகஸ்ட் மாதத்தில் 9.3% ஆக உயர்வடைந்துள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
