அரசில்வாதிகள் மாத்திரமின்றி குளவிகளும் தொழிலாளர்களை பலியெடுக்கின்றன

லிந்துலை ஓல்ட்ரீம் (Alltream) தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டிடயதில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (21) லிந்துலை ஓல்ட்ரீம் தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த 8 தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, தேயிலை தோட்டத்தில் இருந்த மரமொன்றில் அமைக்கப்பட்டிருந்த குளவிக்கூடு திடீரென கலைந்து, பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களைத் கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் லிந்துலை ஓல்ட்ரீம் தோட்டத்தின் லென் தோமஸ் பிரிவைச் சேர்ந்த 77 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஏனைய 7 தொழிலாளர்களும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவில் (OPD) சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Post a Comment