சஜித்தை சந்தித்த வடக்கு கிழக்கு எதிர்கட்சி நாடளுமன்ற உறுப்பினர்கள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு, இம்மக்கள் முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இம்மக்களின் தற்போதைய வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலை மற்றும் குடும்ப வருமான மட்டங்களில் நாட்டில் நிலவும் பணவீக்க நிலைமையின் தாக்கம், நாளாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் குறித்த பிரதேசங்களில் காணப்படும் அடிப்படை வசதிக்குறைபாடுகள் தொடர்பில் இதன்போது பிரதான கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள், தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள், பாடசாலைக் கல்வி மற்றும் குழந்தைகளின் போசாக்கு மட்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Post a Comment