மருதானை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2023 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொருட்களை இறக்குமதி செய்வதாக தெரிவித்து 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவத்துடன் தொடர்புடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வ யதுடைய குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
