பாதுக்க பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம். முச்சக்கர வண்டியில் வாகன இலக்க தகடு இல்லை. அதற்கு மாறாக வாகனத்தில் இலக்கம் எழுதப்பட்டுள்ளத. மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் வாகன இலக்கத்தகடு இல்லையென்றால் அந்த வாகனம் மோடிக்குரிய வாகனமாகவே கருதப்படுகின்றது.
ஆகையினால் பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி கேள்விகளை கேட்கின்றார். அதற்கு வாகனத்தின் உரிமையாளர், ' நாங்கள் ஆர் எம் பி இற்கு பணம் செலுத்தியிருக்கின்றோம், வரும் வரைக்கும் பொறுத்திருக்கதான் வேண்டும், தற்காலிக இலக்கத்தகட்டினை செய்து வைப்பதற்கு எங்களிடம் பணம் இல்லை. ஆகையினால் நான் வெள்ளை நிறத்தில் இலக்கங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
நீங்கள் வேறொரு தவறினை என்மீது சுமத்தப்பார்க்கின்றீர்களா? என கதைத்தவாறே தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்ய முயற்சிக்கின்றார். இதனை அறிந்த காவல் துறை அதிகாரி, ' அதெல்லாம் எனக்கு தெரியாது. தவறு தவறுதான் என தெரிவித்துக்கொண்டு உன்னுடைய கையடக்க தொலைபேசியினை நிறுத்து, வேறு எதனையாவது வீடியோ எடுத்துக்கொள், உன்னுடைய ....... அதனை வீடியோ எடுத்துக்கொள், வையடா போனை, என திட்டியப்படியே போனை தட்டி விடுகின்றார்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்தப்பின்னர் இலக்கத்தகடு வரும் வரை வாகனத்தின் முன்பக்கத்திற்கு வெள்ளை நிறத்திலும் பின் பக்கத்திற்கு மஞ்சள் நிறத்திலும் வாகன தகடொன்றினை தற்காலிகமாக செய்து பொருத்திக்கொள்ள முடியும் இதுவே சட்டம் சொல்கின்றது. ஆனால் இந்த பொலிஸ் அதிகாரியின் நடத்தையினை பாருங்கள்.
காவல் துறை உங்கள் நண்பன் என்கிறார்கள் இலஞ்சம் கொடுக்காவிட்டால் உடனே எதிரியாகின்றனர்.
