அரசாங்கத்தின் 159 பேருக்கு எதிராகவும் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக 'தினன தகுன' அமைப்பினால் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள், தமது நாடாளுமன்றப் பதவிக்கு உரிய சலுகைகள் மற்றும் படிகளைப் பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தாமல், மக்கள் விடுதலை முன்னணியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளதன் மூலம் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இது தொடர்பில் உடனடி விசாரணை ஒன்றை நடத்துமாறு கோரி, 'தினன தகுன அமைப்பினர் இன்று (02) காலை முறைப்பாட்டைச் பதிவு செய்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்து விசாரணை நடத்துமாறும், கட்சியின் வங்கிக் கணக்குகளைச் பரிசோதிக்குமாறும் ஐந்து அம்சக் கோரிக்கைகளின் கீழ் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment