ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ காலமானார்; தற்கொலை எனச் சந்தேகம்

ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயரான எராஜ் பெர்னாண்டோ, கொழும்பில் உள்ள தனது சொகுசு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிப் காலத்தில், கையில் துப்பாக்கியுடன் சென்று சர்ச்சை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியதன் மூலம் எராஜ் பெர்னாண்டோ மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்ட ஒருவராவார்.









Post a Comment