திட்டமிட்ட குற்றவாளி மிதிகம சூட்டிக்கு சொந்தமான வீடு ஒன்றை பயன்படுத்த தடை

 

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர், பிரபாத் மதுசங்க என்றழைக்கப்படும் "மிதிகம சூட்டி" எனும் திட்டமிட்ட குற்றவாளிக்குச் சொந்தமான வீடு ஒன்றை தடையுறுத்தல் செய்ய (பயன்படுத்துவதை இடைநிறுத்த) நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெலிகம, பாதேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றே இவ்வாறு பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீடு 150 லட்சம் ரூபா பெறுமதியானது எனத் தெரிவித்த பொலிஸார், அதற்கமைய அந்த வீட்டையும் காணியையும் பயன்படுத்துவதை இடைநிறுத்த சம்பந்தப்பட்ட விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

Post a Comment