இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்-சிறுவனின் இரகசிய பகுதியில் மிளகாய் தூள் வீசி சித்திரவதை-பெண் உட்பட இருவர் செய்த மோசம்

கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவன் மீது சித்திரவதை மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக, அதன் பெண் காப்பாளரும் அவரது கணவரும் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் சிறுவனின் இரகசியப் பகுதியில் மிளகாய்த்தூள் தூவி சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் மாரஸ்ஸன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் கண்டி ஸ்திரேத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment