பதுங்கியிருந்த குடு நோனா பாதாளம் வரை பாய்ந்த பொலிஸார் சற்று முன்னர் அதிர்ந்த கொழும்பு

கம்பஹா - கிரிபத்கொடை பகுதியில் பல ஆண்டுகளாகப் பரவலாக மதுபான மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த குடு நோனா என்றழைக்கப்படும் 'நோனா அம்மா' எனும் பெண் சந்தேகநபர், ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டிய பணத்துடன் கிரிபத்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய பத்மா ரஞ்சனி என அடையாளம் காணப்பட்டுள்ள இச்சந்தேகநபர், செட்டிக்குளம் பகுதியில் வசிக்கும் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்கு விநியோகிப்பதற்காக போதைப்பொருளைக் கொண்டு சென்றபோதே இவ்வாறு சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டபோது விற்பனைக்குத் தயார்ப்படுத்தப்பட்ட நிலையில் 50 கிராம் ஹெரோயினும், போதைப்பொருள் விற்பனை மூலம் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 48,000 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொம்பனி வீதி மற்றும் கிரிபத்கொடை பகுதிகளில் வசித்துவந்த இவர் மீது ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் உள்ளதோடு, 34 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டவராவார்.

நீண்டகாலமாக பொலிஸாருக்குத் தலைமறைவாகிவந்த இச்சந்தேகநபர் தொடர்பிலும், அவர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சேர்த்த சொத்துக்கள் மற்றும் உடமைகள் குறித்தும் கிரிபத்கொடை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த சொத்துக்கள் குறித்த விவரங்கள் எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அண்மையில் இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகரான 'சூட்டி உக்குங்' என்பவரின் அத்தை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சூட்டி என அழைக்கப்படும் இவரது கணவரும் தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விஷப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள இச்சந்தேகநபர் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment