பொலிஸார் நிறுத்தியும் நிறுத்தவில்லை - திறந்த வெளியில் துப்பாக்கிச் சூடு - அதிர்ந்து போன கொழும்பு - 02

கொழும்பு - பொரளை, வெளுவன பகுதியில் பொலிஸாரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் பொலிஸாரின் கட்டளைகளை மீறி இந்த முச்சக்கர வண்டி செலுத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் ஐந்து பேர் பயணித்துள்ளனர்.

அத்துடன், முச்சக்கர வண்டிக்குள் இருந்த மூன்று வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த ஐவரும் கொலன்னாவையைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் வாள்கள் எதற்காக காணப்பட்டது எனவும் மற்றும் நிறுத்தாமல் சென்றமைக்கான காரணங்களை அறிந்துக்கொள்ள விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Post a Comment