கண்கள், வாயை கட்டி காட்டுக்குள் அழைத்துச் சென்ற கும்பல்..! 9 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் 9 வயது குழந்தை ஒன்றை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள், அதன் கண்கள் மற்றும் வாயை துணி நாடாவால் கட்டி, வீட்டிற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது குழந்தை அலறிய சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள், சந்தேகநபர்களை துரத்திச் சென்றுள்ளனர். பின்னர் பொலிஸாரின் உதவியுடன் நான்கு சந்தேகநபர்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும் அவரது நண்பரும் மேலும் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment