வுனியா, சாலம்பகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (02) இரவு மன்னாரிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் லொரி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வவுனியா - மன்னார் பிரதான வீதிக்கு அருகில் அமைந்திருந்த பழக்கடையொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற வேளையில் குறித்த கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த இருவர் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சாலம்பகுளம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபராவார்.
விபத்து தொடர்பில் டிப்பர் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
