பிபிலை, கொடங்கொல்ல, ஈதனவத்தை பகுதியில் மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈதனவத்தை, கொடங்கொல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது வீட்டில் நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மின்சாரம் தாக்கியவுடன்; அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படும் முன்பே அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து பிபிலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை விரைவில் நடத்தப்படவுள்ளது.
