மஹிந்தவின் குடும்பத்தில் அடுத்தது அவரது மனைவியா - பழிவாங்கும் செயலா? குற்றத்திற்கு தண்டனையா?

 

முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஷிரந்தி ராஜபக்சவிடமும் பிரிதொரு ஊழல் விசாரணை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அபேக்ஷா மருத்துவமனைக்கு பெட் ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, பெறப்பட்ட பல மில்லியன் ரூபாய் பணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவுக் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அபேக்ஷா மருத்துவமனைக்கு  ஸ்கேனர் வழங்குவதாகக் கூறி, ஷிராந்தி ராஜபக்சவால் நடத்தப்படுவதாக அறியப்படும் சிரிலிய சவ்வா அமைப்பானது பல மில்லியன் ரூபாயை அறவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த ஸ்கேனர் வாங்கும் திட்டத்திற்காக, சிறிலியசவியா அமைப்பு அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் நிதியுதவி கோரியுள்ளதாகவும், இதற்காக தேசிய சேமிப்பு வங்கி ஒரு மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, அப்போதைய தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் காரியவசத்திடம் இருந்து வாக்குமூலம் பெறுமாறு குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மஹரகம அபேக்ஷா மருத்துவமனை, சீன அரசாங்கத்திடமிருந்து  ஸ்கேனரை நன்கொடையாகப் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Post a Comment