22ஆவது திருத்தம் - இன்று வாக்கெடுப்பு!


22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாம் வாசிப்பு மீதான நாடாளுமன்ற விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும் (25).

அதன்படி, இச்சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நேற்று (24) ஆரம்பமாகியது.

இச்சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (22) சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்கிரமரத்ன நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதில், 22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பு தேவையில்லை என்றும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றினாலே போதுமானது என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Post a Comment