பிலியந்தலை, பொகுந்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது, 300 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருட்களுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுக் கோட்ட அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, 11 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 6 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 300 மில்லியன் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வட குற்றப் புலனாய்வுக் கோட்டப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
