![]() |
சிறுவர்களை இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் வகையில், கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் 13 புதிய சட்டங்களின் தொகுப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அடிமைப்படுத்தும் சமூக வலைத்தள அம்சங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, AI சாட்பாட்களைக் கொண்ட பொம்மைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், AI மூலம் உருவாக்கப்படும் சிறுவர் துஷ்பிரயோகப் படங்களுக்கும் கடும் குற்றவியல் தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ChatGPT உடனான நீண்ட உரையாடலுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுவனின் நினைவாக ஆடம்ஸ் லா' (Adam's Law) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சட்டம், அமெரிக்காவிலேயே மிகக் கடுமையான தொழில்நுட்பக் கட்டுப்பாட்டுச் சட்டமாகக் கருதப்படுகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் குழந்தைகளின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எனினும், இச்சட்டம் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும் என மனித உரிமை அமைப்புகள் சில விமர்சித்துள்ளன.
