பிரிட்டனில் நடைபெறவுள்ள 'லீ மேன்ஸ் கப்' கார் பந்தயத் தொடரில் நடிகரும் ரேஸருமான அஜித் குமாரின் அணி பங்கேற்கிறது.
அஜித் குமாரின் அழைப்பை ஏற்று, இந்த பந்தயத்தைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டன் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அங்குள்ள பந்தயத் தளங்களைப் பார்வையிடுவதற்காகவும் முதலமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சரின் வருகை குறித்துப் பேசிய அஜித் குமார், 'தனது பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்த முதலமைச்சருக்கு நன்றி. 34 ஆண்டுகளாக ஒரே துறையில் பயணித்த அவர் முதலமைச்சரானதில் மிக்க மகிழ்ச்சி. இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையை மேம்படுத்தத் தமிழக அரசு முயல்வது வரவேற்புக்குரியது' எனத் தெரிவித்துள்ளார்.
