Posts

டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவு புதிய உச்சம்!

 


அமெரிக்காவில் ஓகஸ்ட் மாதத்துடனான ஒரு வருட காலத்தில் நுகர்வோர் விலைகள் 3.4 சதவீதத்தால் உயர்ந்துள்ளதாகத் தொழிலாளர் புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.

 எரிபொருள் விலையேற்றமே இந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்க-ஈரான் போர் தீவிரமடைந்துள்ளதால் உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டொலரைக் கடந்துள்ளது.

 இதனால் அமெரிக்காவில் டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவாக ஒரு கலன் 6 டொலரைத் தாண்டியுள்ளதோடு, பெட்ரோல் விலையும் ஒரே மாதத்தில் 3.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி அடுத்த வாரம் வட்டி வீதங்களை 0.25 சதவீதம் உயர்த்தக்கூடும் என நிதிச் சந்தை ஆய்வாளர்கள் பலமாக நம்புகின்றனர்.

Post a Comment