இரவோடு இரவாக இந்தியாவில் வாழ்வதற்கு தீர்மானித்த 13 பேருக்கு நேர்ந்த கதி

 

இரவோடு இரவாக இந்தியாவில் வாழ்வதற்கு தீர்மானித்த 13 பேர்

இந்திய சுங்கத்துறையால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தீர்மானம்

கடல் வழியாக இந்தியாவுக்குச் செல்ல முயன்ற பெண்கள் உட்பட 13 பேரை காங்கேசன்துறை காவல்துறையினர் நேற்று (06) கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குச் செல்ல இவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவ்வாறு அவர்கள் நாட்டுக்குத் திரும்பியதை அடுத்து, காங்கேசன்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கருண்கொடிச்சிவு, மாம்பிட்டிய, மதவாச்சி, ஹல்தும்முல்ல, வெல்லவாய, மொனராகலை, மாவடிச்சேனை, பலங்கொடை, திருகோணமலை, பதுளை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (07) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Post a Comment