டெல்லியில் இடிந்து விழுந்த கட்டடம்.! 3 மாணவர்கள் உயிரிழப்பு
டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் மாணவர்கள் தங்கும் 5 மாடி PG கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் கவலைக்கிடமாக காயமடைந்துள்ளனர். இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், NDRF, தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டிடத்தின் அடித்தளத்தில் நடைபெற்ற பணிகள் மற்றும் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
