விபத்தால் வசமாக சிக்கிய இளைஞர்கள்

 

கொட்டதெனியாவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருந்தவர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்களின் பயணப் பொதிகளுக்குள் இருந்து 350 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த நபர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


சம்பவம் தொடர்பில் கொடதெனியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment