எரிபொருள் விநியோகத்திற்கு அமுலில் உள்ள QR முறையும் வரம்புகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கோரியுள்ளது
கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்க பிரதிநிதிகள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை ஈடுசெய்ய விதிக்கப்பட்ட 50 ரூபா வரியையும் நீக்குமாறு கேட்டுகொண்டனர்
அவர்களின் கூற்றுப்படி CPC இன் நட்டம் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால் 50 ரூபா வரியை தொடர்ந்து அறவிட வேண்டிய தேவை இல்லை இதன் மூலம் மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க முடியும்
அதேபோல QR முறையும் எரிபொருள் விநியோக வரம்புகளும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத பெறுமதி சேர் வரி மற்றும் விநியோகஸ்தர்களுக்கான சேவை கட்டணம் 3 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப்பட்டதால் தாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்
இதேவேளை சினொபெக் லங்கா ஐஓசி மற்றும் ஆர் எம் பார்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்ட அவர்கள் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர்
