தம்புள்ளை மஹியங்கனை வீதியில் பேருந்து உந்துருளி மோதல் தாயும் மகனும் உயிரிழப்பு

தம்புள்ளை மஹியங்கனை பிரதான வீதியின் பகமூண தமனயாய பகுதியில் இன்று 11 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

களுந்தேவ பகுதியில் நடந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 63 வயது தாயாரும் அவரது 43 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்

அவர்களுடன் சென்ற ஒன்றரை வயது குழந்தை பலத்த காயங்களுடன் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது

கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து முன்னால் சென்ற உந்துருளி தமனயாய பகுதியில் திரும்ப முற்பட்டபோது இந்த மோதல் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பகமூண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன


Post a Comment