அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்து கொள்ள உள்ளதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் கடந்த காலங்களில் அரச சேவை நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் முறையான தகுதிகள் இன்றி வழங்கப்பட்டதால் அரச சேவையின் தரம் கடுமையாக வீழ்சியடைந்ததாக குற்றம் சாட்டினார்
நாட்டின் பிரதான நிர்வாக இயந்திரமான அரச சேவையை மீண்டும் வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என கூறிய அவர் அரச ஊழியர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் சம்பள உயர்வுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
அதேவேளை சுமார் 76,000 புதிய ஊழியர்களை அரச சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
இனிவரும் காலங்களில் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் மற்றும் பாடசாலை அனுமதி போன்றவை அரசியல் தலையீடுகள் இன்றி முறையான பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்
தவறான நடைமுறைகள் இடம்பெறும் போது மட்டுமே அரசாங்கம் தலையிடும் அரச ஊழியர்கள் தங்கள் திறமை மற்றும் தகுதிக்கு ஏற்ப மதிப்பளிக்கப்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு நேர்மையுடன் பங்களிக்க வேண்டும் எனவும் நளின் ஹேவகே வலியுறுத்தினார்
